லட்சத் தீவில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு - "வரும் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

லட்சத்தீவு நிர்வாகம் தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
லட்சத் தீவில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு - வரும் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
x
லட்சத்தீவு நிர்வாகம் தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 
லட்சத் தீவில் பிரஃபுல் படேல் என்ற அரசியல்வாதி நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அவர், அரசு நிறுவனங்கள், விவசாயம், கல்வி நிறுவனங்களில் ஊழியர்களை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நீக்கினார். மாட்டுக்கறியை தடை செய்தார். இந்த நடவடிக்கைக்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ஆன்லைன் முதலீட்டாளர் மாநாட்டில், தனியார் முதலீட்டாளர்களை சுற்றுலா திட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மினிகாய், சுஹேலி மற்றும் கடம தீவுகளுக்கு முதலீட்டை கொண்டுவரவும், 72 ஆண்டுகளுக்கு முதலீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மாதம் 17 ஆம் வரை ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்