அயோத்தி ராமர் கோயில் பணிகள் - பார்வையிட்ட குடியரசு தலைவர்
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கட்டுமான பணிகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கட்டுமான பணிகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேசத்திற்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அயோத்தி ராம் லல்லா கோயிலில் வழிபாடு நடத்தினார். இதையடுத்து ராமர் கோவில் பணிகளை பார்வையிட்ட அவர், ராமாயண மேளாவை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை என்றும், ராமர் உள்ள இடத்தில் அயோத்தி உள்ளது என்றும் குறிப்பிட்டார். ராமர் இந்த நகரத்தில் நிரந்தரமாக வசிப்பதாக தெரிவித்த ராம்நாத் கோவிந்த், அயோத்தியின் உண்மையான அர்த்தம், யாராலும் போர் செய்ய முடியாத இடம் என்று கூறினார். ரகு வம்ச மன்னர்களான ரகு, திலீப், அஜ், தசரத் மற்றும் ராம் ஆகியோரின் தைரியம் மற்றும் சக்தி காரணமாக, அவர்களின் தலைநகரம் வெல்ல முடியாததாக கருதப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
Next Story

