"சொத்துக்களை விற்பனை செய்யவில்லை"- ராகுல்காந்திக்கு, ஸ்மிரிதி இரானி பதிலடி
தனியார்மயமாக்கல் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த பொருளையும் தனியாருக்கு விற்கவில்லை என்றும், ராகுல்காந்தி தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார். மகாராஷ்ட்டிராவில், காங்கிரஸ் அரசு மும்பை பூனா எக்ஸ்பிரஸ் சாலையை தனியாருக்கு விட்டதன் மூலம் எட்டாயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டவில்லையா எனக் கேள்வி எழுப்பினார். அதனை விற்றுவிட்டதாக, ராகுல்காந்தி கூறுகிறாரா என்றும் ஸ்மிரிதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story

