பார்வதி கோவிலுக்கு அடிக்கல் - காணொலி மூலம் மோடி அடிக்கல் நாட்டினார்

குஜராத் மாநிலம் சோம்நாத்தில் பார்வதி கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, கோவில் சார்ந்த நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பார்வதி கோவிலுக்கு அடிக்கல் - காணொலி மூலம் மோடி அடிக்கல் நாட்டினார்
x
சோம்நாத்தில் 30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள பார்வதி கோவிலுக்கு கானொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய தலங்களுக்கு புத்தாக்கம் அளிப்பதற்கான பிரசாத் திட்டத்தின் கீழ் 47 கோடி ரூபாயில் கட்டப்பட்ட சோம்நாத் நடைபாதையையும் திறந்து வைத்தார். தொடர்ச்சியாக மூன்றரை கோடியில் புதுப்பிக்கப்பட்ட சோம்நாத் கோவிலின் வளாகத்தையும், சோம்நாத் கண்காட்சி மையம் மற்றும் கட்டிடக்கலையை எடுத்துரைக்கும் சிற்பங்களையும் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்