பாரா ஒலிம்பிக் - பங்கேற்கும் இந்திய வீரர்கள்.. பதக்கம் வெல்வார்களா இந்திய வீரர்கள் ?

பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடிய நிலையில், அணிவகுப்பின்போது தேசியக்கொடியை ஏந்தி செல்லும் அணி தலைவராக மாரியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
பாரா ஒலிம்பிக் - பங்கேற்கும் இந்திய வீரர்கள்.. பதக்கம் வெல்வார்களா இந்திய வீரர்கள் ?
x
ஒலிம்பிக்கை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 24- ஆம் தேதி தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாடினார்.

மேலும், பாரா ஒலிம்பிக்கில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி செல்லும் கவுரவும், 2016-இல் ரியோ டி ஜெனிரோவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய கொடியை ஏந்தப் போகும் முதல் தமிழக வீரர் என்ற சிறப்பை இதன் மூலம் மாரியப்பன் தங்கவேலு பெற்றிருக்கிறார்.

காணொலி காட்சி வாயிலாக மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேசிய பிரதமர் மோடி, "உங்கள் தியாகத்தால் மட்டுமே மகனால் சாதிக்க முடிந்தது" என மாரியப்பனின் 
தாயாரிடம் உருக்கமாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்