நாடு முழுவதிலும் புலிகளின் எண்ணிக்கை உயர்வு - தமிழகத்தில் 264 புலிகள்

புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக, மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் புலிகளின் எண்ணிக்கை உயர்வு - தமிழகத்தில் 264 புலிகள்
x
புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக, மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்களவையில் பேசிய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே,  கடந்த 2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி புலிகளின் எண்ணிக்கை 1411 ஆக இருந்ததாகவும், அது 2010ம் ஆண்டு உயர்ந்து 1706 ஆகவும், அடுத்த நான்கு ஆண்டுகளில்  2226 ஆகவும் அதிகரித்தது என்றார். 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 2967 புலிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.  தமிழகத்திலும் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், 2006 ம் ஆண்டு 76 ஆக இருந்த எண்ணிக்கை 2010ம் ஆண்டு 163 ஆகவும்,  2014ம் ஆண்டு 229 ஆகவும் உயர்ந்துள்ளது என்றார். இறுதியாக 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 264 புலிகள் இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். புலிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களால் அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.



Next Story

மேலும் செய்திகள்