பெகாசஸ் விவகாரம் - பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பெகாசஸ் விவகாரம் குறித்த ரிட் மனுக்கள்தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெகாசஸ் விவகாரம் - பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
x
பெகாசஸ் விவகாரம் குறித்த ரிட் மனுக்கள்தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி சட்டவிரோதமாக நடத்தப்பட்ட  ஒட்டுகேட்பு விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் விசாரிக்க உத்தரவிட கோரி  மூத்த பத்திரிகையாளர் என். ராம்
உள்ளிட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த  மனுக்கள்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், நளினி சிதம்பரம், மீனாக்ஷி அரோரா,  ஷியாம் திவான் உள்ளிட்டோர் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி வாதிட்டனர். இந்த விவகாரம் கடந்த  2019ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியும், போதுமான ஆதாரங்களை திரட்டி மனுக்களை தாக்கல் செய்திருக்கலாம் என  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளவர்கள்  செல்போன்கள் ஒட்டு கேட்பது குறித்து ஏன் கிரிமினல் புகார் அளிக்கவில்லை  என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். 
பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்த  ரிட் மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.




Next Story

மேலும் செய்திகள்