"உலக பாதுகாப்புக்கு பேரழிவு ஏற்படும்" - ஆப்கானிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் கந்தகார், லஷ்கர்-கா உள்ளிட்ட நகரங்களை கைப்பற்ற தலிபான் பயங்கரவாத அமைப்பு கடுமையாக சண்டையிட்டு வருகிறது.
உலக பாதுகாப்புக்கு பேரழிவு ஏற்படும் - ஆப்கானிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை
x
ஆப்கானிஸ்தானில் கந்தகார், லஷ்கர்-கா உள்ளிட்ட நகரங்களை கைப்பற்ற தலிபான் பயங்கரவாத அமைப்பு கடுமையாக சண்டையிட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, அங்கு நிலைமை மோசமாகி வருகிறது. அந்நாட்டு ராணுவத்துக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. ஆப்கானின் சரிபாதி பகுதியை கைப்பற்றிய தலிபான்கள் மாகாண தலைநகரங்களை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளனர். அமெரிக்கா, நேட்டோ படைகள் உதவியின்றி ஆப்கான் படைகள், தலிபான்களின் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது திணறுவதாக கூறப்படுகிறது.ஹெல்மெண்ட் மாகாணத்தின் தலைநகர் லஷ்கர்-காவை கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் கடந்த சில நாட்களாக சண்டையிட்டு வருகின்றனர். அதனை முறியடிக்க ராணுவமும் போராடி வருகிறது. கடுமையான சண்டைக்கு மத்தியில் பொதுமக்களை வெளியேற ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. தலிபான்களை கண்டு அஞ்சும் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். சண்டைக்கு மத்தியில் அங்கு 40 பேர் உயிரிழந்து உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.இதற்கிடையே தலிபான்களை கண்டு அஞ்சி அங்கிருந்து வெளியேறும் மக்கள், தலிபான்கள் இறக்கம் காட்ட மாட்டார்கள்; இங்கு சாலைகளில் சடலங்கள் கிடக்கிறது; அவர்கள் பொதுமக்களா? தலிபான்களா என்பது தெரியவில்லை எனக் கூறியுள்ளனர். இதேபோன்று தலிபான்கள், தங்களுடைய கோட்டையாக விளங்கிய கந்தகாரையும் கைப்பற்ற கடுமையாக சண்டையிட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே தலிபான் பயங்கரவாதிகளின் எழுச்சி உலக பாதுகாப்புக்கு பேரழிவை ஏற்படுத்தும் என  ஆப்கான் ராணுவ ஜெனரல் சாமி சதாத் எச்சரித்துள்ளார். ஐரோப்பா, அமெரிக்கா என உலக அளவில் செயல்படும் சிறிய பயங்கரவாத குழுக்கள் தலிபான் இயக்கத்தால் மேலும் பலமடையும் என்றும் எச்சரித்திருக்கிறார். 
  

Next Story

மேலும் செய்திகள்