விக்ராந்த் விமானம்தாங்கி போர்க்கப்பல் - 2022-ல் கடற்படையில் இணையும் என எதிர்பார்ப்பு

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான விக்ராந்தின் சோதனை ஓட்டம் கொச்சி கடல் பகுதியில் தொடங்கியது.
விக்ராந்த் விமானம்தாங்கி போர்க்கப்பல் - 2022-ல் கடற்படையில் இணையும் என எதிர்பார்ப்பு
x
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான விக்ராந்தின் சோதனை ஓட்டம் கொச்சி கடல் பகுதியில் தொடங்கியது. இதன் மூலம் உலகில்  விமானந்தாங்கிய போர் கப்பல் கட்டும் திறன் கொண்ட குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.இந்திய கடற்படையிடம் தற்போது, ஒரே விமானம் தாங்கிய போர்க்கப்பலாக, ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா மட்டுமே உள்ளது.ரஷ்யாவிடம் வாங்கப்பட்ட இந்த விமானம் 2013 ஆம் ஆண்டிலிருந்து கடற்படையில் இயங்கி வருகிறது. இதற்கிடையே உள்நாட்டிலேயே நவீன விமானந்தாங்கி போர்க்கப்பலை உருவாக்கும் பணிகள், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்று வந்தது. 
சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வந்த விமானந்தாங்கி போர்க்கப்பலின் பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த போர்க்கப்பலின் சோதனை ஓட்டம் கொச்சி கடல் பகுதியில் செவ்வாய் கிழமை தொடங்கியது.இது பெருமைக்குரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தருணம் என கூறியிருக்கிறது இந்திய கடற்படை.
கப்பலுக்கு நாட்டின் முதல் விமானம் தாங்கிய போர் கப்பலான விக்ராந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1961 ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து வாங்கப்பட்ட விக்ராந்த், 1997 ஆம் ஆண்டு கடற்படையிலிருந்து விடுவிக்கப்பட்டது. 1971 வங்க போரின்போது விக்ராந்த் போர்க்கப்பல் ஈட்டித்தந்த பலன்களின் 50-வது ஆண்டு நினைவாக , புதிய போர்கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கி இருக்கிறது.40 ஆயிரம் டன் எடை கொண்ட புதிய விக்ராந்த் போர்க்கப்பலில் மிக்-29 கே சூப்பர்சானிக் போர் விமானங்கள் மற்றும் கே.ஏ. 31 ரக ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும்.போர் விமானங்களை இறக்கி மேற்கொள்ளப்படும் சோதனைகள் அனைத்தும் முடிந்ததும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விக்ராந்த் கப்பல் கடற்படையில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.விக்ராந்தின் போர்கப்பலின்சோதனை தொடங்கியிருப்பதன் மூலம், உலக அளவில் விமானந்தாங்கி கப்பல் கட்டும் திறன் கொண்ட குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்