கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு
x
கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, மூன்றாவது அலையை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள், 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பிற மாநிலங்களில் இருந்து ரயில், பேருந்துகளில் வரும் பயணிகளுக்கு கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்