மாநிலங்களவையில் கூச்சல் - மசோதாவை கிழித்து உறுப்பினர்கள் போராட்டம்

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
x
முன்னதாக மதியம் 2 மணிக்கு அவை கூடியபோது, எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மாநிலங்களவையில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களைவை கூட்டத்தில் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசினர். அப்போது பல்வேறு பிரச்சனைகளை பேச வலியுறுத்தி கடும் கூச்சலை உறுப்பினர்கள் எழுப்பி கொண்டே இருந்தனர். இதற்கு நடுவே மசோதோ நிறைவேற்றப்பட்டது. அப்போது மாநிலங்களைவையில்  சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பி, மசோதா நகலை கிழித்து எரிந்து தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்