ஒலிம்பிக்கில் 2வது முறையாக வெண்கலம் வென்ற பிவி சிந்துவிற்கு மக்களவையில் வாழ்த்து

ஒலிம்பிக்கில் 2வது முறையாக வெண்கலம் வென்ற பிவி சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்து தொடங்கிய மக்களவை எதிர்கட்சியினரின் அமளியால் முடங்கியது.
ஒலிம்பிக்கில் 2வது முறையாக வெண்கலம் வென்ற பிவி சிந்துவிற்கு மக்களவையில் வாழ்த்து
x
மக்களவை தொடங்கியதும் பேசிய சபாநாயகர் ஓம்பிர்லா, நாடாளுமன்ற நடவடிக்கைக்காக பல கோடி ரூபாய் மக்களின் பணம் செலவிடப்படுவதாகவும், அமளியால் 2 வாரங்கள் அவை இயங்கவில்லை என குறிப்பிட்டதுடன், அமைதியான முறையில் அவை நடவடிக்கையை தொடர ஒத்துழைக்குமாறு வலியுறுத்தினார். இருப்பினும், அவையில் எதிர்கட்சியினர் கூச்சலிட கேள்வி நேரம் தொடங்கியது. முத்ரா யோஜனாவின் கீழ் கடன் வழங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உற்பத்தி, வர்த்தகம், சேவைகள் மற்றும் விவசாயத்துடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கு முத்ரா கடன்கள் வழங்கப்படுவதாக கூறினார். மேலும், அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் மற்றும் பிற ஊடகம் மூலம் தொலைதூர மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெரியப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் பெகாசஸ் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்