கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: 6 பேர் கொண்ட குழு அனுப்பி வைப்பு - மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை
கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை மத்திய சுகாதாரத் துறை கேரளா அனுப்பி உள்ளது.
கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை மத்திய சுகாதாரத் துறை கேரளா அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் கேரளாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், கேரளாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய 6 பேர் கொண்ட குழுவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பி உள்ளது. இந்த குழுவானது, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் தலைமையில் செயல்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கேரளாவில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

