இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு - ஒரே நாளில் 47 % தொற்று அதிகரிப்பு

இந்தியாவில் 4 மாதங்களுக்கு பின்னர் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரே நாளில் 47 சதவீதம் அதிகரித்துள்ளது.
x
இந்தியாவில் 4 மாதங்களுக்கு பின்னர் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரே நாளில் 47 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...

கொரோனா 2-வது அலையை முடிவுக்கு கொண்டுவர இந்தியா தீவிரமாக போராடிவரும் நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரே நாளில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47 சதவீதம்  அதிகரித்துள்ளது.

நான்கு மாதங்களுக்கு பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திங்கள் கிழமை 30 ஆயிரத்துக்கும் கீழே வந்தது. 

29 ஆயிரத்து 689 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், செவ்வாய் கிழமை 43 ஆயிரத்து 654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 640 பேர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர்.

இதில் பாதிக்கும் அதிகமான பாதிப்புக்கள் கேரளாவிலிருந்து பதிவானவையாகும். கேரளாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 22 ஆயிரத்து 129 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 6 ஆயிரத்து 258 பேரும், கர்நாடகாவில் ஆயிரத்து 501 பேரும், தமிழகத்தில் ஆயிரத்து 767 பேரும் தொற்றுக்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

கேரளாவில் 7 மாவட்டங்கள், மகாராஷ்டிராவில் 2 மாவட்டங்கள், வடகிழக்கு மாநிலங்களில் 13 மாவட்டங்கள் என நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக காணப்படுவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.  

நாம் சோர்ந்து போகலாம், வைரஸ் சோர்ந்து போகாது எனக் கூறியிருக்கும் நிதி ஆயோக்கின் சுகாதாரத்துறை உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால், கவனமாக இருக்க வேண்டும் எனக் எச்சரித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்துதல் தொற்றின் தீவிரம் மற்றும் உயிரிழப்பை தடுக்கும் எனக் கூறியிருக்கும் அவர்,  தடுப்பூசி செலுத்துதலை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்