கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு
பதிவு : ஜூலை 27, 2021, 09:41 PM
கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2019ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி கர்நாடகாவின் முதலமைச்சராக 4வது முறையாக எடியூராப்பா பதவி ஏற்றார். 75வயதான எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றபோது வயது மூப்பை காரணம் காட்டி 2 ஆண்டுகள் கடந்ததும் தனது பதவியை விட்டுக் கொடுக்க வேண்டுமென பாஜக சார்பில் நிபந்தனை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற எடியூரப்பா, தான் பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து, புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான்,  ஜி.கிஷன் ரெட்டி, பாஜக மாநில தலைவர் நலின்குமார் கதீல், எடியூரப்பா மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.  நீண்ட ஆலோசனைக்கு பிறகு உள்துறை அமைச்சராக இருந்த  பசவராஜ் பொம்மை முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  நாளை பசவராஜ் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாகவும், அதன்பின்னர் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எடியூரப்பா கவனித்து வந்த நிதித்துறையை கூடுதலாக, பசவராஜ் பொம்மை கவனிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது முதலமைச்சராக தேர்வாகியுள்ள பசவராஜ் பொம்மையின் தந்தை  எஸ்.ஆர் பொம்மையும் கர்நாடக முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

50 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

பிற செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

35 views

"பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை ரத்து செய்க" - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

"பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை ரத்து செய்க" - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

6 views

"தேர்தல் ஆணையத்தின் செயல்- சட்ட விரோதமில்லை" - சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் ஏற்றது, சட்டவிரோதம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.

216 views

மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

97 views

ஆந்திர ஊரக உள்ளாட்சித் தேர்தல் - ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங். அமோக வெற்றி

ஆந்திராவில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளது.

22 views

"இந்து மதம் என்பது வினோத அமைப்பு" - மக்களவை எம்.பி ரவிக்குமார் கருத்து

கடவுளை வணங்குபவர்களும், கடவுளை மறுத்து பேசுகிறவர்களும் இந்து மதத்தில் இருக்க முடியும் என்று மக்களவை எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.