காலம் போற்றும் அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று... திறமைக்கு வசதி வாய்ப்பு ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த இளைஞர்களின் எழுச்சி நாயகனைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
காலம் போற்றும் அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று
x
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று... திறமைக்கு வசதி வாய்ப்பு ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த இளைஞர்களின் எழுச்சி நாயகனைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

"நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்...ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்"...கலாமின் வலிமை நிறைந்த வார்த்தைகள் இவை...

வறுமையாலும், புறக்கணிப்புகளாலும் சுருண்டு போகும் மாணவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுப்பவை...

இளைஞர்களின் உருக்குலைந்த நம்பிக்கையை கட்டி எழுப்ப... தன் வாழ்க்கையே வரலாறாய் மாற்றி...எல்லோர் மனதிலும் ஆதர்சன நாயகனாக விளங்கும் அக்னிச் சிறகு தான் கலாம்...

இராமேஸ்வரத்தில் பிறந்து...ஏழ்மையில் வளர்ந்த இவர், குடும்ப வறுமையைப் போக்க வேலைக்குச் சென்று கொண்டே படித்தார்...

இளங்கலை இயற்பியல் பயின்றாலும், தன் ஆர்வம் இதிலில்லை என்பதை உணர்ந்து, தனக்கு பிடித்த துறையான விண்வெளி ஆய்வு குறித்த பொறியியல் படிப்பில் முதுகலையும் பெற்றார்...

இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜெ அப்துல் கலாம் 5 ஏவுகணைத் திட்டங்களில் பணியாற்றியதால், இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்...

குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று தன் பணியைத் திறம்படச் செய்தார்...

சுற்றுச் சூழல் பாதுகாப்பை பெரிதும் போற்றிய அவர், இந்தியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் 5 மரகன்றுகளையாவது நட்டு, அதை மரமாக்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார்...

"நான் இளம் வயதினருடன்... குறிப்பாக உயர் நிலைப்பள்ளி மாணவர்களுடன் இருக்கும் போது நிறைவாக உணர்கிறேன்" என்று கூறி, மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்பதை உணர்ந்து, அவர்களுடன் உரையாடுவதையே அதிகம் விரும்பினார்...

இறுதி நொடியில் கூட மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டே தன் இன்னுயிர் நீத்தார்...

2020ல் இந்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், மாறுவதற்குரிய திட்டத்தை வகுத்திருந்தார்...

இளைஞர்கள் மீதும் தன் நாட்டின் மீதும் எத்துனை நம்பிக்கை வைத்திருப்பார்...! வருடம் 2021...கலாம் கொடுத்த காலம் முடிந்து விட்டாலும், என்றாவது ஒரு நாள் தான் கண்ட கனவு நிறைவேறும் என்று நிச்சயம் சொர்க்கத்தில் ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருப்பார்... கலாமின் கனவுகள் நிறைவேறுமா... பொறுத்திருந்து பார்ப்போம்...


Next Story

மேலும் செய்திகள்