இரண்டு குழந்தைகள் கொள்கை திட்டம் - மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதும் இரண்டு குழந்தைகள் கொள்கையை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
x
நாடு முழுவதும் இரண்டு குழந்தைகள் கொள்கையை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


இந்தியாவில், குழந்தைகள் பெறுவதற்கான அதிகபட்ச எண்ணிக்கையை நிர்ணயிக்கும் கொள்கை எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை


அசாம் மற்றும் உத்தர பிரதேச மாநில அரசுகள், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு அரசின் சலுகைகள், மானியங்களை தடை செய்யும் சட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன
 

ராஜஸ்தான், குஜராத், மகாராஸ்ட்ரா, உத்தரகாண்ட், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டவர்கள், உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிட தடை விதித்துள்ளன.

 
இந்நிலையில் இந்தியாவில் தேசிய அளவில் இரண்டு குழந்தைகள் கொள்கையை உருவாக்கும் எண்ணம் மத்திய அரசிடம் தற்போது இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.
 

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் குழந்தை பிறப்பு விகிதத்தை குறைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 
 

குழந்தை பிறப்பு விகிதம் 2.1ஆக இருந்தால், மக்கள் தொகை அதிகரிக்காமல், ஒரே அளவில் சீராக தொடரும் என்ற நிலையில் இந்தியாவி​ன் குழந்தை பிறப்பு விகிதம் தற்போது 2.2ஆக உள்ளது
 

தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் 1.6ஆக உள்ளது. கேரளாவில் 1.8ஆகவும் , மேற்கு வங்கத்தில் 1.6ஆகவும் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்