எஸ்.எஸ்.பி முனிராஜின் அடுத்த அதிரடி! - குற்றவாளிகளை துளைக்கும் தோட்டா !
பதிவு : ஜூலை 24, 2021, 02:31 PM
ஐந்து கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட மருத்துவரை 24 மணி நேரத்தில் மீட்டது மட்டுமின்றி, துப்பாக்கி தோட்டாக்களால் அடுத்தடுத்து அதிரடி காட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார், ஆக்ராவின் எஸ்.எஸ்.பி முனிராஜ்.....
மத்திய பிரதேசம்,  ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் எல்லை பகுதிக்குள் அமைந்துள்ள சம்பல் பள்ளத்தாக்கு... நகரங்களில் இருக்கும் பணக்காரர்களை கடத்தி பணம் பறிப்பதே இங்கு இருக்கும் கொள்ளையர்களின் வேலை... 
அப்படி கடத்தப்பட்டவர்தான், ஆக்ராவை சேர்ந்த பிரபல மருத்துவர், உமாகாந்த் குப்தா.... இவரை விடுவிக்க 5 கோடி ரூபாய் கேட்டு கொள்ளையர்கள் மிரட்ட, எந்த தொகையுமின்றி கடத்தப்பட்ட 24 மணி நேரத்திலேயே மீட்டு அதிரடி காட்டியுள்ளது, எஸ்.எஸ்.பி முனிராஜ் தலைமையிலான அதிரடி படை.... இந்த கும்பலை சேர்ந்த இளம்பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களுள் தப்பி சென்ற சாம்பல் கும்பலின் தலைவர்  பதம் சிங் தோமரை சோதனைச்சாவடியில் வைத்து அடையாளம் கண்ட அதிரடி படையினர்..... கொள்ளையனையும் அவரது கூட்டாளியையும் துரத்தி சென்று சுற்றி வளைக்க, பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்,  முனிராஜ் தலைமையிலான அதிரடி படையினர்....
இதில் இரண்டு கொள்ளையர்களும் கொல்லப்பட்ட நிலையில்,  குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்திருந்ததால் போலீசார் அனைவரும் உயிர்தப்பினர்.. இந்நிலையில் தான் மீண்டும் அனைவரையும் உற்று பார்க்கை வைத்துள்ளார், ஆக்ரா மாவட்டத்தில் எஸ்.எஸ்.பி ஆக பணியாறும் தமிழக சிங்கம், முனிராஜ்...தருமபுரி மாவட்டம் அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்த இவர், 2009ல் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று... கடந்த பிப்ரவரி மாதம் முதல் உத்தரபிரதேசத்தில் பணியாற்றி வருகிறது.. பொறுப்பேற்றது முதல் தற்போது வரை மூன்று சம்பவங்களில் குற்றவாளிகளுடன் துப்பாக்கி சண்டை  என அதிரடி மேல் அதிரடி காட்டி வரும் தமிழர் முனிராஜ், தற்போது உ.பி மக்கள் கொண்டாடும் போலீஸ்காரராக வலம் வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

410 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

32 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

13 views

பிற செய்திகள்

ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு - காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு

தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் வியாழன் அன்று நடைபெற உள்ள ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

7 views

"தெலுங்கானாவில் ரூ.750 கோடி முதலீடு; 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு" - மலபார் குழுமம் அறிவிப்பு

மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் நிறுவனம் தெலங்கானாவில் 750 கோடி ரூபாய் முதலீட்டில் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய தங்கம் மற்றும் வைர நகை உற்பத்தி பிரிவை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

8 views

நாளை 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்பு

45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை கூடுகிறது.

11 views

2021ல் செல்வாக்கு மிகுந்த 100 பிரபலங்கள் - மோடி, மம்தா இடம்பிடிப்பு

டைம் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் நரேந்திர மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

14 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

13 views

புதிய வளாகங்கள் திறப்பு- பிரதமர் மோடி உரை

புதிய நாடாளுமன்றம் கட்டடம் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.