கேரளத்தில் குறையாத கொரோனா - தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் உச்சத்தில் இருப்பதால், அச்சத்தில் உள்ளன அருகாமை மாநிலங்கள்..
கேரளத்தில் குறையாத கொரோனா - தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு
x
தமிழக கேரள எல்லையான கன்னியாகுமரியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கேரள மாநிலத்தில் நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. 
இது ஒருபுறமிருக்க, ஜிகா வைரஸ் பாதிப்பும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவில் இதுவரை 42 பேர் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில், அண்டை மாநிலமான கேரளத்தில் கொரோனா அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் தமிழக - கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதோடு, அனைவருக்கும் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.பக்ரீத் பண்டிகையையொட்டி கேரளத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தற்போது எல்லைப்பகுதியில் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. 
இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள தமிழக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்