பெகாசஸ் - செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் - பெகாசஸ் மென்பொருள் செயல்படுவது எப்படி?

உலகம் முழுவதுமே செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறி, இந்திய நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. எப்படி செயல்படுகிறது இந்த மென்பொருள் என்பதை பாருங்கள்...
பெகாசஸ் - செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் - பெகாசஸ் மென்பொருள் செயல்படுவது எப்படி?
x
இஸ்ரேலை தலைமையிடமாக கொண்ட என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் தயாரிப்புதான், பெகாசஸ் எனும் உளவு மென்பொருள். இந்த மென்பொருளின் 2016ம் ஆண்டு வெர்சனின் படி, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் லிங்க் மூலம், செல்போன்களில் தரவிறக்கப்படும். 
2019ல் உருவான நவீன வெர்சன், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மட்டுமின்றி, வாட்ஸ் ஆப்பில் மிஸ்ட் கால் கொடுத்து, தரவிறக்கம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மிஸ்ட் கால் வந்ததே தெரியாத வகையில், விவரத்தை அழித்து விடுவது இந்த மென்பொருளின் கில்லாடி தொழில்நுட்பம்.
இலக்காக நிர்ணயிக்கப்பட்டவரின் ஸ்மார்ட்போனில் பெகாசஸ் மென்பொருள் நிறுவப்பட்டதில் இருந்து, குறுஞ்செய்தி, மின்னஞ்சல், புகைப்படங்கள், வீடியோக்கள், தொடர்புகள் உள்ளிட்டவற்றை திருட முடியும்.
குறிப்பாக, செல்போன் உரையாடல் மட்டுமின்றி, மைக்ரோபோனை ஆக்டிவேட் செய்து சாதாரண உரையாடல்களையும் ஒட்டுக்கேட்க முடியும்.
வாட்ஸ்ஆப் உரையாடல்களை கண்காணித்தல், கேமராவை செயல்படச் செய்து ரகசியமாக புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்தல், ஜிபிஎஸ்-சை ஆன் செய்து, சம்பந்தப்பட்ட  நபர் தற்போதுள்ள இடம் மற்றும் அவரது நகர்வுகளை கண்காணித்தல் ஆகியவற்றையும் செய்ய முடியும் என்று இணைய வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்