மகாராஷ்டிராவில் இடைவிடாது கனமழை - ஜூலை மாதத்திற்கான மழை பதிவு
பதிவு : ஜூலை 24, 2021, 01:50 PM
மகாராஷ்டிராவில் கடந்த 40 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது... இடைவிடாத மழையால் தத்தளித்து வரும் பகுதிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.குறிப்பாக கடற்கரையோரம் உள்ள மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. வீடுகளுக்கு புகுந்த வெள்ளநீர்... அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்.... மின்சாரம் துண்டிப்பு என மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அந்த மாவட்டத்தில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன 50க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில், தேசிய பேரிடர்  மீட்பு குழுவினருடன், இந்திய ராணுவமும் ஈடுபட்டுள்ளது. 
மேலும், பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்து இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது... வெள்ளச் சேதங்கள், உயிரிழப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே,  மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு சார்பில் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதேபோல் கர்நாடாகா மாநிலத்தின் வடக்கு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஆறுகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதோடு, வெள்ள நீர் கரைபுண்டு ஓடுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

799 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

97 views

முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

49 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

36 views

பிற செய்திகள்

கனமழை மற்றும் வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரளா - 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

1 views

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி - நீர்வளத்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

0 views

கனமழையால் நிலச்சரிவு : வீடுகள் சேதம் - 15 பேரின் உடல்கள் மீட்பு

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்கும் பணி மோப்ப நாய் உதவியுடன் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

9 views

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் சேதம் : உயிரிழந்தோரின் உடல்கள் கண்டெடுப்பு

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி மோப்ப நாய் உதவியுடன் தொடர்கிறது.

8 views

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல் சாந்தி நியமனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல் சாந்தியாக என்.பரமேஸ்வரன் நம்பூதிரியும், மாளிகை புரம் மேல் சாந்தியாக சம்பு நம்பூதிரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

13 views

"தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பி வைப்பு" - உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி

கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.