மகாராஷ்டிராவில் இடைவிடாது கனமழை - ஜூலை மாதத்திற்கான மழை பதிவு

மகாராஷ்டிராவில் கடந்த 40 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது... இடைவிடாத மழையால் தத்தளித்து வரும் பகுதிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் இடைவிடாது கனமழை - ஜூலை மாதத்திற்கான மழை பதிவு
x
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.குறிப்பாக கடற்கரையோரம் உள்ள மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. வீடுகளுக்கு புகுந்த வெள்ளநீர்... அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்.... மின்சாரம் துண்டிப்பு என மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அந்த மாவட்டத்தில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன 50க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில், தேசிய பேரிடர்  மீட்பு குழுவினருடன், இந்திய ராணுவமும் ஈடுபட்டுள்ளது. 
மேலும், பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்து இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது... வெள்ளச் சேதங்கள், உயிரிழப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே,  மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு சார்பில் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதேபோல் கர்நாடாகா மாநிலத்தின் வடக்கு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஆறுகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருவதோடு, வெள்ள நீர் கரைபுண்டு ஓடுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்