தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை மரணம் - தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்த சோகம்
பதிவு : ஜூலை 22, 2021, 01:03 PM
கேரள சட்டமன்றத் தோ்தலில் போட்டியிட்ட பிரபல திருநங்கை திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள சட்டமன்றத் தோ்தலில் போட்டியிட்ட பிரபல திருநங்கை திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.12ஆம் வகுப்புடன் கல்வியை கைவிட்ட கொல்லத்தைச் சோ்ந்த திருநங்கை அனன்யாகுமாரி, வானொலி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளா், மேடை நிகழ்ச்சி தொகுப்பாளா் என பண்முகம் கொண்டு உயர்ந்துள்ளார். அண்மையில் நடந்த சட்டமன்றத் தோ்தலில் ஜனநாயக சமூக நீதிக் கட்சி சார்பில் போட்டியிட்டார். இதனிடையே, எா்ணாகுளத்தில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய் அன்று மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இதனிடையே, அவர் கடந்த ஆண்டு பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதன் பின்னர், கடுமையான உடல் வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறிய நண்பர்கள், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறினர். தவறான சிகிச்சையால் அனன்யா பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மருத்துவ இயக்குநர் விசாரிக்குமாறு அமைச்சா் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். பாலின மாற்று அறுவை சிகிச்சை குறித்த தகவல்களை தனியார் மருத்துவமனை குழு சேகரிக்க உள்ளது. அனன்யா மரணத்துக்கு நீதி வேண்டும் என திருநங்கைகள் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

63 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

43 views

பிற செய்திகள்

கேரளாவில் 22,414 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34.71 லட்சம்

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

6 views

விமான நிலைய பொருளாதார திருத்த மசோதா - மசோதாவுக்கு வரவேற்பு அளித்துள்ள அதிமுக

விமான நிலைய பொருளாதார ஒழுங்கு முறை ஆணைய மசோதா மாநிலங்களவையில் இன்று அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

13 views

டெல்டாவில் தொடரும் ஹைட்ரோ கார்பன் பணி - மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தகவல்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு ஓஎன்ஜிசி நிறுவனம் 6 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

8 views

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

13 views

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

8 views

"ரயில்வே தனியார்மயமாகவில்லை" - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

நாட்டில் எந்த ஒரு பயணிகள் ரயிலோ, வழித்தடமோ தற்போது வரை தனியார் மயமாக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.