பறவை காய்ச்சல் - மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

பறவை காய்ச்சல் காரணமாக ஹரியானாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
x
பறவை காய்ச்சல் காரணமாக ஹரியானாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹரியானாவை சேர்ந்த 11 வயது சிறுவன் பறவைக் காய்ச்சல் காரணமாக கடந்த ஜூலை 12 ம் தேதி உயிரிழந்தார்.இந்தியாவில் மனிதர்களுக்கு ஏற்பட்ட முதல் பறவை காய்ச்சல் தொற்றாக இது கருதப்படுகிறது.இந்நிலையில், சிறுவனுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு  காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என கடந்த ஜூலை 16ஆம் தேதி முதல் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அதில் யாருக்கும் தொற்று அறிகுறி தென்படவில்லை என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், சிறுவன் வசித்து வந்த பகுதியை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் அளவுக்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பறவை காய்ச்சல் தொற்று குறித்து விசாரணை நடத்த மாநில சுகாதார துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவனின் மாதிரிகளை சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்