கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு - பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஓபெக் நாடுகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறையுமா? என்பது பற்றி அலசுகிறது இந்தத் தொகுப்பு..
கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு - பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
x
கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஓபெக் நாடுகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறையுமா? என்பது பற்றி அலசுகிறது இந்தத் தொகுப்பு...கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் வள நாடுகள் அமைப்பான ஒபெக் OPEC ஒப்புக்கொண்டுள்ளது. உலக அளவில் தேவை அதிகரித்திருப்பதால் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவு செய்துள்ளன.ஒபெக் OPEC அமைப்பின் இந்த முடிவால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் அடைந்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலையை குறைக்கக்கோரி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் பல நாடுகளும்
இந்த கோரிக்கையை முன்வைத்தன.இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் இறுதி வரை நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் அதிகமாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய தற்போது இந்த நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொண்டுள்ளன.கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா ?

Next Story

மேலும் செய்திகள்