இன்னும் சில வாரங்களில் கொரோனா 3ம் அலை ? - உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
பதிவு : ஜூலை 21, 2021, 09:42 AM
பக்ரீத் பண்டிகைக்காக தளர்வுகள் அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பக்ரீத் பண்டிகைக்காக தளர்வுகள் அளிக்கப்பட்டதை எதிர்த்து
தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு கடும்
கண்டனம் தெரிவித்துள்ளது. இதன், பின்னணி பற்றி பார்க்கலாம்.இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் கொரோனா 3ம் அலை தாக்கக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த சூழலில், சிவாலயங்களுக்கு கங்கை நீரைக் கொண்டு செல்லும் கன்வார் யாத்திரைக்கு, உத்திரப்பிரதேச அரசு அனுமதி அளித்திருந்தது. இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், உத்தரப்பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இதனால், கன்வார் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டிய நிலைக்கு, உத்திரப்பிரதேச அரசு தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, டெல்லி அரசும் கன்வார் யாத்திரைக்கு தடை விதித்தது. இதற்கிடையே, 21ம்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது கேரள அரசு. ஏற்கனவே, கேரளாவில் நாளொன்றுக்கு 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் நிலையில், இந்தத் தளர்வுகள் தேவைதானா என்ற கேள்வி எழுந்த நிலையில், இதையெதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், கேரள அரசின் நடவடிக்கை மக்களின் உயிரோடு விளையாடுவது போன்றது என கடுமையாக விமர்சித்தனர்.அரசியல் அழுத்தத்தினாலேயே தளர்வுகள் வழங்கப்படுவதாகவும்,
சுட்டிக்காட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

388 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

52 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

41 views

பிற செய்திகள்

கேரள சுற்றுலாத்துறையின் புதிய செயலியை வெளியிட்டார் நடிகர் மோகன்லால்

கேரளாவில் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு வசதியாக, கேரள சுற்றுலாத்துறை புதிய செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.

8 views

"விமானியின் தவறே விபத்துக்கு காரணம்" - கோழிக்கோடு விமான விபத்தின் அறிக்கை

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக்கு காரணம் விமானியின் தவறு என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

116 views

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: "கூடுதலாக 316 ஆம்புலன்ஸ் சேவை" - கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் கூடுதலாக 316 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஆயிரத்து 500 பணியாளர்கள் பணிகளை துவக்கியுள்ளதாக கேரள சுகாதாரதுறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

10 views

ட்ரோன்களில் தடுப்பூசி அனுப்பும் திட்டம் - தெலங்கானாவில் தொடங்கியது

தெலங்கானா மாநிலத்தில் ட்ரோன் மூலமாக தடுப்பூசியை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதுகுறித்த ஒரு தொப்பை பார்க்கலாம்...

30 views

46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழை

தலைநகர் டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவு இவ்வாண்டு பருவமழை பெய்துள்ளது.

12 views

குஜராத் முதல்வர் பரபரப்பு ராஜினாமா - காரணம் என்ன?

குஜராத் முதல்வர் பரபரப்பு ராஜினாமா - காரணம் என்ன?

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.