இன்னும் சில வாரங்களில் கொரோனா 3ம் அலை ? - உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

பக்ரீத் பண்டிகைக்காக தளர்வுகள் அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்னும் சில வாரங்களில் கொரோனா 3ம் அலை ? - உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
x
பக்ரீத் பண்டிகைக்காக தளர்வுகள் அளிக்கப்பட்டதை எதிர்த்து
தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு கடும்
கண்டனம் தெரிவித்துள்ளது. இதன், பின்னணி பற்றி பார்க்கலாம்.இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் கொரோனா 3ம் அலை தாக்கக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த சூழலில், சிவாலயங்களுக்கு கங்கை நீரைக் கொண்டு செல்லும் கன்வார் யாத்திரைக்கு, உத்திரப்பிரதேச அரசு அனுமதி அளித்திருந்தது. இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், உத்தரப்பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இதனால், கன்வார் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டிய நிலைக்கு, உத்திரப்பிரதேச அரசு தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, டெல்லி அரசும் கன்வார் யாத்திரைக்கு தடை விதித்தது. இதற்கிடையே, 21ம்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது கேரள அரசு. ஏற்கனவே, கேரளாவில் நாளொன்றுக்கு 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் நிலையில், இந்தத் தளர்வுகள் தேவைதானா என்ற கேள்வி எழுந்த நிலையில், இதையெதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், கேரள அரசின் நடவடிக்கை மக்களின் உயிரோடு விளையாடுவது போன்றது என கடுமையாக விமர்சித்தனர்.அரசியல் அழுத்தத்தினாலேயே தளர்வுகள் வழங்கப்படுவதாகவும்,
சுட்டிக்காட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்