டெல்டா பிளஸ் - எச்சரிக்கும் மத்திய அரசு

இரண்டாம் அலையில் டெல்டா வேரியன்ட் வகை தொற்றால் 80 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...
டெல்டா பிளஸ் - எச்சரிக்கும் மத்திய அரசு
x
இரண்டாம் அலையில் டெல்டா வேரியன்ட் வகை தொற்றால் 80 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...

டெல்டா வேரியன்ட் வகை தொற்று பரவலால், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவமாடியது.

ஒட்டுமொத்தமாக 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் டெல்டா வேரியன்ட் வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கோவிட் மரபியல் கூட்டமைப்பின் துணைத் தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்

முதலாம் அலையில் கண்டறியப்பட்ட ஆல்பா வேரியண்ட்டை விட 40 முதல் 60 சதவீதம் வரை வேகமாக பரவ கூடியது கூறப்பட்டுள்ளது

தற்போது டெல்டா வேரியன்ட் டெல்டா பிளஸ் ஆக உருமாறி தமிழ்நாடு உட்பட உட்பட 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும்

இதுவரை 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரோரா தெரிவித்துள்ளார்.

நேபாளம், போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, போலந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் டெல்டா பிளஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும்,

இதன் பரவல் தன்மை, தடுப்பூசி செயல்திறன் குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தென் மாநிலங்களில் சில மாவட்டங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தொற்று அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள மருத்துவர் அரோரா, இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை எனவும், 

இனி எத்தனை அலைகள் வந்தாலும்,
அதனை எதிர்கொள்ள கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்