வடமாநிலங்களில் பருவமழை தீவிரம் - கனமழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் டெல்லி, அரியானா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் உள்பட பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
x
வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் டெல்லி, அரியானா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் உள்பட பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மழைக்கால கூட்டத்தொடர் என்பதை உறுதி செய்யும் வகையில் டெல்லியில் இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக பேசிய பிரதமர் மோடி, கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு உரையாற்றினார்.

கொட்டும் மழையில் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்ட வண்ணம் மெதுவாக சென்றன. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

பல இடங்களில் மழைநீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. பலாம் பகுதியில் சாலையில் முட்டளவுக்கு நீர் சென்றதால் காலை வேலைக்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்தவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

டெல்லி பிரகதி மைதான் பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய நீரில் பேருந்துகள் ஊர்ந்து சென்றன.  டெல்லி பிரகலாத்பூர் பகுதியில் பாலத்திற்கு அடியில் நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

டெல்லியில் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். 

கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது. பல இடங்களில் வாகனங்கள் மழைநீரால் சூழப்பட்டது.  

குர்கானில் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் பாதி மூழ்கியவாறு வாகனங்கள் சென்றன.

ஜம்மு காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
 





Next Story

மேலும் செய்திகள்