"அயோத்திக்கு இடம் வாங்கியதில் முறைகேடு புகார்"

ராமர் கோயிலுக்கு இடம் வாங்கியதில் முறைகேடு புகார் பூதாகரமான நிலையில், அயோத்தி அறக்கட்டளைக்கு மாவட்ட நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
x
ராமர் கோயிலுக்கு இடம் வாங்கியதில் முறைகேடு புகார் பூதாகரமான நிலையில், அயோத்தி அறக்கட்டளைக்கு மாவட்ட நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராமர்கோயில் கட்டுவதற்கு அயோத்தியில் இடம் ஒதுக்கிய நிலையில், ராமர் கோயில் அமையும் இடத்துக்கு எதிரே உள்ள பழமையான பக்கீர் ராம் கோயிலை மடத்துடன் சேர்த்து, அயோத்தி அறக்கட்டளை வாங்கியது சர்ச்சையாகியுள்ளது. 

அந்தக் கோயிலின் மறைந்த தலைவர் மஹந்த் ராஜ்கிஷோர் வகுத்த விதிப்படி, யாருக்கும் விற்க முடியாது என்றும், அதைமீறி முறைகேடாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை வாங்கியதாக அந்த மாநில சிவசேனா தலைவர் சந்தோஷ் துபே உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

அவர் இறந்த நிலையில், கோயில் நிர்வாகிகள் என மார்ச் 26ல் இருவர் பொறுப்பேற்றதையும், மறுதினமே மடத்துடன் கோயில் விற்கப்பட்டதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த விவகாரத்தில், பதிலளிக்குமாறு ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளை மற்றும் பக்கீர் ராம் கோயில் நிர்வாகிகள் இருவருக்கு அயோத்தி மாவட்ட சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்