கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்க அனுமதி - பச்சைக் கொடி காட்டிய கர்நாடகா அரசு

கர்நாடகாவில் கல்லூரிகள், தியேட்டர்களை திறக்க கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது.
கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்க அனுமதி - பச்சைக் கொடி காட்டிய கர்நாடகா அரசு
x
கர்நாடகாவில் கல்லூரிகள், தியேட்டர்களை திறக்க கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. 50 சதவீத இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் திறக்க கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், ஆடிட்டோரியங்கள் போன்ற பொது நிகழ்வு நடைபெறும் இடங்களிலும் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், ஜூலை 19 முதல் இரவு நேர ஊரடங்கில் ஒருமணி நேரத்தைக் குறைத்து, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. 
ஜூலை 26ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என்றும், கல்வி நிறுவனங்களுக்கு வரும் அனைவரும் குறைந்தது ஒரு தவணையாவது தடுப்பூசி போட்டிருக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்