மழைக்கால கூட்டத்தொடரின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், அதில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்...
x
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், அதில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்...கொரோனா பீதி... பெட்ரோல் விலை உயர்வு... என பல முக்கிய பிரச்னைகளுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த சூழலில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உட்பட 33 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.ஆரோக்கியமான விவாதங்களை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாகவும், சுமூகமான முறையில் கூட்டத்தொடர் நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்..இருப்பினும் கொரோனா இரண்டாம் அலையில் அதிகரித்த உயிரிழப்புகள், பெட்ரோல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம், தடுப்பூசி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளன.அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது என்பதால் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் என உறுதி அளித்தார்


Next Story

மேலும் செய்திகள்