ஆகஸ்ட் மாத இறுதியில் 3ம் அலை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கணிப்பு

கொரோனா 3ம் அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ள நிலையில், 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். இதுபற்றி அலசுகிறது இந்தத் தொகுப்பு....
ஆகஸ்ட் மாத இறுதியில் 3ம் அலை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கணிப்பு
x
கொரோனா 3ம் அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ள நிலையில், 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். இதுபற்றி அலசுகிறது இந்தத் தொகுப்பு....  கொரோனா பெருந்தொற்று, தொடர்ச்சியாக உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த சூழலில், கொரோனா மூன்றாம் அலையின் தொடக்க நிலையில் உலகம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், டெல்டா வகை கொரோனா ஆதிக்கம் செலுத்தக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.இது ஒருபுறமிக்க, இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா பரவலின் மூன்றாம் அலை தாக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கணித்திருக்கிறது.இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா மூன்றாம் அலையை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.மேலும், உருமாறிய கொரோனா வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும் என குறிப்பிட்ட பிரதமர், மாநிலங்களில் சுகாதார கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக, 23 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளை பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்