"முதலமைச்சர் பதவி விலகும் அவசியம் இல்லை" - பதவி விலகல் வதந்திக்கு எடியூரப்பா விளக்கம்
பதிவு : ஜூலை 17, 2021, 01:26 PM
கர்நாடக முதலமைச்சர் பதவி ராஜினாமா செய்ய உள்ளதாக பரவி வரும் வதந்தி முற்றிலும் உண்மை இல்லை என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் தீவிரம் காட்டி வரும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்பொழுது, மாநிலத்திற்கான திட்டங்கள் குறித்தும், மேகதாது அணைக்கான ஒப்புதல் குறித்தும் பேசியதாக கூறபடுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக பரவிவரும் தகவலுக்கு எடியூரப்பா பதிலளித்துள்ளார். டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பதவி விலகலுக்கான எந்த அவசியமும் இல்லை எனவும் மேகதாது குறித்து மட்டுமே பிரதமரை சந்தித்தாகவும் தெரிவித்தார். கர்நாடக மாநில பாஜகவினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில், பதவி விலகல் சர்ச்சைக்கு எடியூரப்பா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

பிற செய்திகள்

ஜிப்மரில் சூரிய ஒளிமின் உற்பத்தி நிலையம் திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

9 views

புதுச்சேரி சென்ற குடியரசு துணைத் தலைவர்- மகாகவி பாரதியார் படத்துக்கு மரியாதை

புதுச்சேரி சென்றுள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மகாகவி பாரதியாரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

17 views

பாரதியாரின் 100வது நினைவு தினம்- நிர்மலா சீதாராமன்,எல்.முருகன் மரியாதை

பாரதியாரின் 100வது நினைவு தினத்தை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை செலுத்தினார்.

26 views

கேரள சுற்றுலாத்துறையின் புதிய செயலியை வெளியிட்டார் நடிகர் மோகன்லால்

கேரளாவில் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு வசதியாக, கேரள சுற்றுலாத்துறை புதிய செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.

13 views

"விமானியின் தவறே விபத்துக்கு காரணம்" - கோழிக்கோடு விமான விபத்தின் அறிக்கை

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக்கு காரணம் விமானியின் தவறு என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

225 views

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: "கூடுதலாக 316 ஆம்புலன்ஸ் சேவை" - கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் கூடுதலாக 316 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஆயிரத்து 500 பணியாளர்கள் பணிகளை துவக்கியுள்ளதாக கேரள சுகாதாரதுறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.