இந்தியாவில் 20 லட்சம் கணக்குகள் முடக்கம் - வாட்ஸ்ஆப் நடவடிக்கை

இந்தியாவில் 20 லட்சம் வாட்ஸப் பயனாளிகளின் கணக்குகளை, விதிமுறைகளை மீறியதற்காக வாட்ஸப் நிறுவனம் தடை செய்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
x
இந்தியாவில் 20 லட்சம் வாட்ஸப் பயனாளிகளின் கணக்குகளை, விதிமுறைகளை மீறியதற்காக வாட்ஸப் நிறுவனம் தடை செய்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

உலகெங்கும் சுமார் 200 கோடி பயனாளிகளைக் கொண்டுள்ள வாட்ஸப் நிறுவனத்திற்கு, இந்தியாவில் 40 கோடி பயனாளிகள் உள்ளனர்.

 
இவர்களில் 20 லட்சம் இந்தியப் பயனாளிகளின் கணக்குகளை, விதிமுறைகளை மீறியதற்காக மே, ஜூன் மாதங்களில் தடை செய்துள்ளதாக வாட்ஸப் நிறுவனம் கூறியுள்ளது. 

 
தடை செய்யப்பட்ட பயனாளிகளில் 95 சதவீதத்தினர், செய்திகளை மிக அதிக முறை பார்வார்ட் (forward) செய்ததற்காக தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 
தவறான, தேவையில்லாத செய்திகள், காணொளிகள், புகைப்படங்களை மிக அதிக முறை பார்வார்ட் செய்வதன் மூலம், சாதி, மத, இன மோதல்கள், வன்முறை சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இத்தகைய முன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக வாட்ஸப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

 
இந்தியாவின் புதிய டிஜிட்ட சட்ட விதிமுறைகளின் கீழ், வாட்ஸப் நிறுவனம் சமர்ப்பித்துள்ள மாதாந்திர அறிக்கையில் இந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

 
மிக நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், மாதம் ஒன்றுக்கு உலக அளவில் சுமார் 80 லட்சம் கணக்குகளை பல்வேறு விதிமீறல்களுக்காக, வாட்ஸப் நிறுவனம் தடை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்