மேகதாது அணை விவகாரம் - பிரதமர் மோடியை சந்தித்த கர்நாடக முதல்வர்

மேகதாது அணைத் திட்டம் குறித்து பிரதமர் மோடியிடம், கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது அணை விவகாரம் - பிரதமர் மோடியை சந்தித்த கர்நாடக முதல்வர்
x
மேகதாது அணைத் திட்டம் குறித்து பிரதமர் மோடியிடம், கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, வெள்ளிக்கிழமையன்று, நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  எடியூரப்பா, மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய அனுமதி வழங்கிட  பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக கூறினார். சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரிங் ரோடு திட்டம், பெங்களூரூவில் அமெரிக்க தூதரகம் அமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் பேசியுள்ளார். மேகதாது அணை குறித்தும் பிரதமர் மோடியிடம், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்