சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு - நாளை அதிகாலை முதல் 5 நாட்களுக்கு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறக்கப்பட்டு, நாளை அதிகாலை முதல் 5 நாட்களுக்கு பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு - நாளை அதிகாலை முதல் 5 நாட்களுக்கு அனுமதி
x
ஆடி மாதப் பூஜைக்காக இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடை திறந்து தீபாரதனை நடைபெற்றது. இதையடுத்து, நாளை முதல் 21ம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. தினமும் 5 ஆயிரம் 
பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், அவர்கள் முன்கூட்டியே இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் என்றும், அல்லது கோவிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன், ஆர்டிபிசிஆர் கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டு, தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்ட் 16 தேதி நடைதிறக்கப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்