தலிபான்கள் தாக்குதலில் புகைப்படகலைஞர் டேனிஸ் சித்திக் பலி

இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா மரண காட்சிகளை உலகத்திற்கு வெளிக்கொண்டு வந்த பிரபல ராய்டர்ஸ் புகைப்பட கலைஞர் டேனிஸ் சித்திக் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.
x
இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா மரண காட்சிகளை உலகத்திற்கு வெளிக்கொண்டு வந்த  பிரபல ராய்டர்ஸ் புகைப்பட கலைஞர் டேனிஸ் சித்திக் ஆப்கானிஸ்தானில்  தாலிபான்கள் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.
 
கொரோனாவால் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளை உலக மக்களுக்கு எடுத்து சென்றவர் டேனிஸ் சித்திக். இவர் எடுத்த புகைப்படங்கள் கொரோனாவின் கோர முகத்தை உலகிற்கு காட்டியது.
மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் நோயாளிகள் படும் அவதியையும் கங்கை கரையோரம் கொரோனாவல் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யப்பட்ட காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது என்றால் அதற்கு சொந்த காரர் டேனிஸ் சித்திக். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானில் ரானுவத்திற்கும் தாலிபான்கள் இடையேயான சண்டையை அருகில் இருந்து படம் பிடித்து வந்துள்ளார். கடந்த 3 தினங்களுக்கு டேனிஸ் சித்திக் சென்ற வாகனம்  தாலிபான்கள் குண்டு  தாக்குதலில் சிக்கியது. அப்போது அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த சித்திக்  தாலிபான்கள் தாக்குதல் குறித்து அவரது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். இந்ந நிலையில் காந்தகாரில் நடைபெற்ற உள்நாட்டு போரின் காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்த சித்திக் ஸ்பின் போட்லாக் என்ற இடத்தில் நடைபெற்ற தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்