தென்மேற்கு பருவமழை தீவிரம் - வெள்ளத்தில் மிதக்கும் மும்பை மாநகர்
பதிவு : ஜூலை 16, 2021, 10:57 AM
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக, மும்பை மாநகர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர் மழையால் மும்பை மாநகர் வெள்ளத்தில் மிதக்கிறது. காந்தி மார்க்கெட், வடலா, கிழக்கு விரைவுச்சாலை, சியன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சியன் ரயில்நிலையத்தில் தண்டவாளம் தெரியாத அளவிற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் ரயில் சேவை பாதியில் நிறுத்தப்பட்டது.  கனமழை, வெள்ளத்தால், மும்பை மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

பிற செய்திகள்

ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு - காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு

தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் வியாழன் அன்று நடைபெற உள்ள ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

7 views

"தெலுங்கானாவில் ரூ.750 கோடி முதலீடு; 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு" - மலபார் குழுமம் அறிவிப்பு

மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் நிறுவனம் தெலங்கானாவில் 750 கோடி ரூபாய் முதலீட்டில் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய தங்கம் மற்றும் வைர நகை உற்பத்தி பிரிவை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

8 views

நாளை 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்பு

45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை கூடுகிறது.

11 views

2021ல் செல்வாக்கு மிகுந்த 100 பிரபலங்கள் - மோடி, மம்தா இடம்பிடிப்பு

டைம் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் நரேந்திர மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

14 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

13 views

புதிய வளாகங்கள் திறப்பு- பிரதமர் மோடி உரை

புதிய நாடாளுமன்றம் கட்டடம் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.