"தடுப்பூசி குறித்துமுன்னரே தகவல் தருகிறோம்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேட்டி

மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஜூலை மாதம் வரை வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 13 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி குறித்துமுன்னரே தகவல் தருகிறோம் - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேட்டி
x
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜூலை மாதம் மாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பூசி வழங்கப்படும் என ஜூன் 19-ஆம் தேதியே தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 
எனவே மாநிலங்களுக்கு எப்போது எவ்வளவு தடுப்பூசி கிடைக்கும் என்பது முன்கூட்டியே தெரியும் என அவர் தெரிவித்துள்ளார். தேவையற்ற கருத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் பீதியை உருவாக்குவதற்காகவே தெரிவிக்கப்படுவதாக மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். 
மத்திய அரசு முன் கூட்டியே இத்தகைய தகவலை தெரிவித்தும் தவறான மேலாண்மை மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பது இதில் என்ன பிரச்சனை அதற்கு யார் காரணம் என்பது தெளிவாக தெரிவதாக அவர் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 11  கோடியே 46 லட்சம் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் ஜூலை மாதம் அது13 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்