செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு..!

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
x
இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்றும், நீட் தேர்வுக்கு நாளை மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு,  சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக, தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155 முதல் 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், தேர்வு மையங்களும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் மாணவர்களுக்கு முக கவசம் கொடுக்கப்பட்டு, தேர்வு மையங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்