மக்களவை கூட்டம் 19 ஆம் தேதி தொடங்குகிறது : காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்
பதிவு : ஜூலை 12, 2021, 05:40 PM
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய தேவையில்லை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கப்படவுள்ள நிலையில் கூட்டத் தொடருக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். 

மக்களவை கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் யார் யாரெல்லாம் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லையோ அவர்கள் மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் கூறினார். கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை காலை மாலை என இரு வேறு நேரங்களில் செயல்பட்ட நிலையில் தற்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். புதியதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு பெறும் எனவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.