ரஷ்யா சென்றுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் - ஒப்பந்தங்களை சீனா மீறுவதாக குற்றச்சாட்டு
பதிவு : ஜூலை 09, 2021, 07:53 PM
எல்லை பிரச்சினை தொடர்பான ஒப்பந்தங்களை சீனா பின்பற்றவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்குள்ள ஒரு ஆய்வு நிறுவனத்தில் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், கடந்த சில வருடங்களாக, எல்லைப் பிரச்சனை தொடர்பான இரு தரப்பு ஒப்பந்தங்களை சீனா பின்பற்றவில்லை என குற்றம்சாட்டினார்.கடந்த 45 வருடங்களாக இந்தியா சீனா எல்லைப் பகுதியில் மோதல்கள், பிரச்சனைகள் எதுவும் ஏற்படாத நிலையில், 2020 ஜூனில் லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதல்களினால் இந்த அமைதி குலைந்துள்ளதாக கூறினார். எல்லைப் பிரச்சனையை தீர்க்க, கடந்த ஆண்டு மாஸ்கோவில் இந்தியா மற்றும் சீனா இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில், ஒரு ஐந்து அம்ச தீர்வு ஒன்று இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.எல்லைப் பிரச்சனையை தவிர, பல்வேறு இதர பிரச்சனைகளும் இந்தியா சீனா இடையே நீடிப்பதாக, ஜெய்சங்கர் தனது உரையில் கூறினார். பசிபிக் பிராந்தியத்தில், ரஷ்யாவும், இந்தியாவும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

"பட்டாசு வெடிப்பு - 6 மணி நேரமாக உயர்த்துங்கள்" - பட்டாசு தயாரிப்பாளர் சங்கம் இடைக்கால மனு

பட்டாசு வெடிக்கும் நேரத்தை 6 மணி நேரமாக உயர்த்தக்கோரி, பட்டாசு தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

9 views

ஆன்லைன் ரம்மி - கேரள அரசின் தடை நீக்கம்

கேரளாவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கான தடையை நீக்கி, அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

7 views

ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார் எல்.முருகன் - மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார்.

17 views

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் - விவசாயிகளுக்கு ஆதரவாக கடைகள் அடைப்பு

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

10 views

டிஜிட்டல் சுகாதார சேவை திட்டம் - காணொலி வாயிலாக தொடங்கி வைத்த மோடி

மக்களின் சுகாதார பதிவுகள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் விதமாக டிஜிட்டல் சுகாதார இயக்கம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

11 views

ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் - பீகாரைச் சேர்ந்த சுபம் குமார் சாதனை

2020ம் ஆண்டு யூபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த சுபம் குமாருக்கு அவரது சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.