புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு எதிர்ப்பு - பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள, உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும், உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என, உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு எதிர்ப்பு - பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல்
x
இது தொடர்பாக, மத்திய அரசு சார்பில் சில தினங்களுக்கு முன், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உயர்நீதிமன்றங்களில் புதிய தகவல் தொழில்நுட்பம் விதிமுறைகளுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது, தற்போதைக்கு இந்த விவகாரத்தில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க போவதில்லை என நீதிபதிகள் கூறினர். ஏற்கனவே இது தொடர்பான மனு  நிலுவையில் இருப்பதால், அந்த வழக்குகளுடன் சேர்த்து மத்திய அரசின் வழக்கும், வரும் 16ஆம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்