"35 மாநிலங்களில் மாறுபட்ட கொரோனா வைரஸ்" - மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் 35 மாநிலங்களில், 174 மாவட்டங்களில், மாறுபட்ட வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
35 மாநிலங்களில் மாறுபட்ட கொரோனா வைரஸ் - மத்திய சுகாதாரத்துறை தகவல்
x
மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், தெலங்கானா, மேற்குவங்கம் மற்றும் குஜராத்தில் அதிக எண்ணிக்கையிலான மாறுபாடுகள், கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்த மாறுபட்ட கொரோனா மாதிரிகள், ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வகையை சேர்ந்தது. மகாராஷ்டிராவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகையின் பாதிப்பு பல மாவட்டங்களில் வழக்கத்துக்கு அதிகமாக இருந்ததாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்