புதிய மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியீடு
பதிவு : ஜூலை 07, 2021, 06:20 PM
மத்திய அமைச்சரவையின் புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டு 43  பேர் அடங்கிய பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது.  இது குறித்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலில்,தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் பெயர் இடம்பெற்றுள்ளது.ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரர் பசுபதி குமார் பாரஸ், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். இவர்களை தவிர நாராயண் தத்து ரானே, சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், ராமச்சந்திர பிரசாத் சிங், உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். இவர்களை தவிர இணையமைச்சர்களாக பதவி வகித்து வந்த, கிரண் ரிஜிஜூ, மான்சுக் மாண்டவியா, கிஷன்ரெட்டி, அனுராக் சிங் தாக்கூர், ஹர்தீப் சிங் பூரி, ஆர்.கே.சிங் உள்ளிட்டோரின் பெயர்களும் மத்திய அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவர்களை தவிர மீனாட்சி லேகி, அன்னபூர்ணா தேவி, ஏ. நாராயணசாமி, கவுசல் கிஷோர், உள்ளிட்ட 43 பேரின் பெயர்கள் மத்திய அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

பிற செய்திகள்

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவி தற்கொலை - கணவரை கைது செய்ய வலியுறுத்தல்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

0 views

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணை தேர்வு - ஹால்டிக்கெட் வெளியிட்டது தேர்வுத்துறை

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

8 views

பிங்க் நிறத்திற்கு மாறிய ஏரிகள் - காரணத்தை ஆராய்ந்து வரும் அதிகாரிகள்

அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா பகுதியில் இருக்கும் இரண்டு ஏரிகள் பிங்க் நிறத்திற்கு மாறியது.

38 views

கிரீஸை வாட்டி வரும் வெப்ப அலை - தகிக்கும் ஏதென்ஸ் நகரம்

கிரீசில் நிலவி வரும் கடும் வெப்ப அலையில் ஏதென்ஸ் மக்கள் தகித்து வருகின்றனர்.

84 views

ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு - பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

1 views

தீவிரமாகப் போகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு

அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.