ஜேஇஇ மெயின் தேர்வு தேதி அறிவிப்பு

JEE மெயின் தேர்வுகளின் 3, 4 ஆம் கட்ட தேர்வுகள் ஜூலை 20-25 மற்றும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
x
தேசிய தேர்வு முகமை அறிக்கையில் மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை 20 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என கூறப்பட்டுள்ளது.  நான்காம் கட்ட தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தேர்வு மையங்கள்  828 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வின் போது மாணவர்கள் அனைவரும் முக கவசம் கொடுக்கப்படும் என்றும், தேர்வு மையங்களில், சமூக இடைவெளி பின்பற்றி மாணவர்கள் அமர வைக்கப்பட உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட தேர்வுக்கு ஜூலை 8 தேதி வரையிலும், நான்காம் கட்ட தேர்வுக்கு 9 முதல் 12-ம் வரையிலும் விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வு முகமை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்