ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு காலதாமதம் ஆனதால் ஆத்திரம் - டெலிவரி ஊழியரை கீழே தள்ளி விட்ட நபர்

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு வர கால தாமதம் ஆன ஆத்திரத்தில் உணவு டெலிவரி செய்ய வந்த நபரை ஒருவர் கீழே தள்ளி விடும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது...
x
கேரளாவில் ஒருவர் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்யும் நபர் காலதாமதமாக வீட்டிற்கு கொண்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நபர், உணவை கொடுக்க வந்த டெலிவரி பாயை சரமாரியாக திட்டியதோடு அவரை கீழே தள்ளிவிட்டார். டெலிவரி செய்ய வந்த நபர் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் திரும்பி சென்றார். நடந்த இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

Next Story

மேலும் செய்திகள்