புதிய குடியிருப்புகள் திறப்பு விழா; காணாமல்போன கத்தரிக்கோல் - ஆத்திரமடைந்த தெலங்கானா முதல்வர்
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், குடியிருப்புகள் திறப்பு விழாவில் ரிப்பனை கைகளால் அறுத்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், குடியிருப்புகள் திறப்பு விழாவில் ரிப்பனை கைகளால் அறுத்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜன்ன சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள மெடிபள்ளியில் புதிதாக குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இதற்கான திறப்பு விழாவில் அந்த மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பங்கேற்றார். அப்போது, ரிப்பனை வெட்டுவதற்கு அவர் கத்தரிக்கோல் கேட்ட நிலையில், கத்தரிக்கோலை காணாமல் அதிகாரிகள் தேடினர். இதனால், ஆத்திரமடைந்த சந்திரசேகர் ராவ், ரிப்பனை கைகளால் அறுத்தெறிந்து குடியிருப்புக்குள் நுழைந்தார்.
Next Story

