கேரளாவில் இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு - அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி
கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
நாட்டிலேயே தற்போது கேரளாவில் அதிகளவில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 12 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், 146 பேர் உயிரிழந்தனர். அங்கு தொற்று பாதிப்பு சராசரியாக 10 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
Next Story
